அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கை இல்லா பிரேரணையை ஒருமனதாக தோற்கடிக்க ஆளும் கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் நேற்று (18.07.21) இரவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையை அதிகரிப்பது அமைச்சரின் தனிப்பட்ட தீர்மானம் இல்லை என்பதினால் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் டீ.பி சானக தெரிவித்துள்ளார்.
இதேவேளை வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில வுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கை இல்லாப் பிரேரணை மீது, இன்றும் நாளையும் விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகையால் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் கொழும்புக்கு வெளியே செல்ல வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அறிவுரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.