சீனாவில் எதிர்பாராத காலநிலை மாற்றத்தால் அளவிற்கு அதிகமாக மழை பெய்து வருவதனால் பல கிராமங்கள் நீாில் மூழ்கி உள்ள நிலையில் 12 போ் உயிாிழந்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க காலநிலை மாற்றம் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளதுடன் பல்வேறு நாடுகளில் காலநிலை மாற்றம் காரணமாக மழை, புயல், வெள்ளம் என்று இயற்கை பேரிடர்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில் காலநிலை மாற்றத்தின் விளைவாக சீனாவிலும் தற்போது இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. சீனாவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த ஒரு வாரமாக அதி தீவிர கனமழை பெரிது வருகிறது. தெற்கு சீனாவில் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஹெனான் என்னும் மாகாணத்தில் அதி தீவிர கனமழை பெய்து வருகிறது எனவும் குறித்த மாகாணத்தில் இதற்கு முன் இவ்வளவு மழை பெய்தது இல்லை எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை உயர்வு காரணமாக இதுபோன்ற அதீத மழை ஏற்படலாம். காலநிலை மாற்றம்தான் இதற்கான காரணமாக இருக்க முடியும் என்று சீனாவின் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.முக்கியமாக சீனாவின் செங்சாவ் பகுதியில் ஒரே மணி நேரத்தில் 200 மிமீ மழை பெய்துள்ளதனால் அந்த நகரமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இரவிரவாக பெய்த கடும் மழையினால் மொத்த நகரமும் நீரில் மூழ்கி பல பகுதிகளில் முதல் மாடி வரை வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் பல நூறு கார்கள் வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
மேலும் இதுவரை அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் 12 பேர் பலியாகி உள்ளனர் எனவும் தொடா்ந்தும் ஹெனான் பகுதியில் தீவிர கனமழை பெய்து வருவதனால் 10 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனா் எனவும் . 1000க்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கி உள்ளனா் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரிடர்களில் ஒன்றாக இந்த ஹெனான் மழை வெள்ளம் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது