337
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த சிறுமி ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நான்கு பேரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த நால்வரையும் 48 மணி நேரம் விசாரணை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதனடிப்படையில் ரிஷாட் பதியுதீனின் மனைவியை விசாரணை செய்ய கிருலப்பனை காவற்துறையினரிற்கும் ஏனைய மூவரையும் விசாரணை செய்ய பொரளை காவற்துறையினரிற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Spread the love