முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்களாக அமர்த்தப்பட்டிருந்த வயது குறைந்த சிறுமிகளும் யுவதிகள் பலரும் பல்வேறான பாலியல் வன்புணர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுகின்றன.
அவர்கள் கடுமையான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு விசேட காவற்துறைக் குழுக்கள் ஐந்து நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் முழுமையான கண்காணிப்பிக் கீழ், இந்த காவற்துறை குழுக்கள் விசாரணைகளை மேற்கொள்ளும்.
ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்களாக கடமையாற்றிய யுவதிகள் மற்றும் பெண்கள் 11 பேர் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன. என்றும் காவற்துறையினர் தெரிவித்தனர்.
அவ்வாறு அழைத்துவரப்படும் யுவதிகளும் சிறுமிகளும், ரிஷாட் பதியூதீனின் மைத்துனரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்றும் காவற்துறை தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய யுவதியொருவர், ரயில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் காவற்துறையினர் தெரிவித்துள்னர்.