ஹிஷாலினிக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பட்டது. யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்றைய தினம் காலை 10 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.