வட்டுவாகல் கேப்பாபிலவு பகுதிகளில் கையகப்படுத்தியிருக்கும் காணிகளை அரசு உடனடியாக பொது மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் – செல்வராசா கஜேந்திரன் நாடாளுமன்றில் வலியுறுத்தி உள்ளார்.
வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அங்கிருப்பதனை மக்கள் விருப்பவில்லை. அந்த முகாமுக்காக காணிகள் சுவீகரிக்கப்படுவதனை அரசு கைவிட வேண்டும். 36 பொது மக்களுக்குச் சொந்தமான 378 ஏக்கர் காணிகளும் மக்களிடம் கையளிக்கப்படல் வேண்டும்.
கேப்பாபிலவில் 55 பொது மக்களுக்குச் சொந்தமான 59.8 ஏக்கர் குடியிருப்புக் காணிகளும் மேலும் 4 பேருக்குச் சொந்தமான 100 ஏக்கர் மத்தியவகுப்புக் காணிகளும்பிலக்குடியிருப்பில் 8 பேருக்குச் சொந்தமான 24 ஏக்கர் காணிகளும் உடன் விடுவிக்கப்படல் வேண்டும். சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரும் ஆசிரியர்களது போராட்டம் நியாயமானது. அவர்களது கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படல் வேண்டும் என்ற கோரிக்கைகளை தனது உரையில் வலியுறுத்தி உள்ளார்.