
வடமாகாணத்தில் நேற்றய தினம் 2 வயது சிறுவன் உட்பட 22 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வடக்கில் மேலும் 71 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா மற்றும் யாழ் மாவட்டத்தில் இருந்து பெறப்பட்டிருந்த 266 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் இவ்வாறு 71 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
அதில் 22 பேர் சிறுவர்களாக உள்ளனர். 2வயது சிறுவன், 6வயது இரட்டையர்களான பெண் குழந்தைகள் உட்பட 22 சிறுவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் கூறுகின்றன.
Spread the love
Add Comment