Home இலங்கை america vs china – கொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பாளர்கள் பற்றிய அமெரிக்க தூதரின் அறிக்கை தவறு!

america vs china – கொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பாளர்கள் பற்றிய அமெரிக்க தூதரின் அறிக்கை தவறு!

by admin

2021 ஜூலை 29 அன்று செய்தியாளர்கள் குழுவினர் மத்தியில் உரையாற்றும் போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவரான உ தெரிவித்திருந்த கருத்துக்கள் தொடர்பில் CHEC Port City Colombo (Pvt) Ltd தனது நிலைப்பாட்டினை வெளியிட்டுள்ளது.

அதில் அவர் கூறியதாவது (மேற்கோள்) “துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தில் பணியாற்றும் நிறுவனங்களில் ஒன்று அமெரிக்காவில் எங்கள் தடைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதுடன், அந்த நிறுவனத்துடன் வியாபாரம் செய்வது பரிந்துரைக்கத்தக்கதல்ல. (மேற்கோள்) CHEC Port City Colombo அல்லது அதன் தாய் நிறுவனமான China Harbour Engineering Company அல்லது China Communications Construction Company ஆகிய எந்தவொரு நிறுவனமும் ஆகஸ்ட் 2020 இல் அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட தடைப்பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை.

ஓகஸ்ட் 2020 இல் தெளிவாக அறிவிக்கப்பட்டபடி, அமெரிக்காவின் தடைப்பட்டியலில் இலக்காக உள்ள China Communications Construction Company இன் துணை நிறுவனங்களுடன் எந்தவொரு நேரடி வர்த்தக உறவும் இல்லை என்பதை CHEC Port City Colombo மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது. தென்சீனக் கடல் பிராந்தியத்தில் கடலிலிருந்து நிலத்தை மீளப்பெறும் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு சில நிறுவனங்களே அமெரிக்க தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்ட துணை நிறுவனங்களாகும். கொழும்பு துறைமுக நகரத்தில் கடலிலிருந்து நிலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள CHEC Port City Colombo (Pvt) Ltd ஆனது CCCC இன் முற்றிலும் மாறுபட்ட ஒரு துணை நிறுவனமாகும்.

மேலும், இச்செயற்திட்ட நிறுவனத்தின் தாய் நிறுவனமான CCCC இற்கு எதிராக அமெரிக்காவால் ஒருபோதும் எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்;. CCCC ஆனது ஒரு Fortune 500 நிறுவனம் என்பதுடன், தற்போது 78 ஆவது ஸ்தானத்தில் உள்ளது. கொழும்பு துறைமுக நகரத்திற்காக கடலிலிருந்து நிலத்தை மீட்கும் பணிகள் 2019 ஜனவரியில் முடிவடைந்தன. நவீன உட்கட்டமைப்பு கட்டுமானப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், கட்டடங்களை நிர்மாணிப்பதற்காக 20 நிலத் துண்டுகள் தற்போது தயாராக உள்ளன.

தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸின் தவறான கருத்துகளை தெளிவுபடுத்துவதோடு, கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விளக்கத்தை முன்வைப்பதே எங்கள் நோக்கமாகும். முதலீட்டு நட்புறவான கொள்கைகள், திறமையான நிர்வாக கட்டமைப்புகள் மற்றும் நிலைபேண்தகு கோட்பாடுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் முக்கியமான ஒரு திட்டமிடப்பட்ட நகரமான, கொழும்பு துறைமுக நகரம், எந்த நாட்டவராக இருந்தாலும், எந்த முதலீட்டாளருக்கும் ஒரு கவர்ச்சியான முதலீட்டு வாய்ப்பாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More