Home உலகம் திருமண நிகழ்வில் மின்னல் தாக்கு! பங்களாதேஷில் 17 பேர் உயிரிழப்பு!!

திருமண நிகழ்வில் மின்னல் தாக்கு! பங்களாதேஷில் 17 பேர் உயிரிழப்பு!!

by admin

பங்களாவில் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட குழுவினர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர் எனச் செய்திகள் வெளியாகி உள்ளன.

நாட்டின் வட மேற்குப் பகுதியில் பத்மாநதிக்கரையில் படகு ஒன்றில் பயணித்ததிருமணக் குழுவினரே மின்னல் தாக்குதல்களுக்கு இலக்காகினர். மணமகன் சகிதம் மணப் பெண்ணின் இல்லத்துக்குப் படகில் சென்றவர்களில் 17 பேரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தனர்என்று கூறப்படுகிறது

மணமகன் உட்பட காயமடைந்த 14 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர் என்று அதிகாரி கள் தெரிவித்தனர். கடும்மழை பெய்து கொண்டிருந்தபோதுதிருமணக் குழுவினர் ஷிப்கஞ்ச் Shibganj நகரில் ஆற்றுக் கரையை அண்மித்த வேளையில் மின்னல்கள் அவர்களைத் தாக்கின என்று கூறப்படுகிறது.

இந்தியாவைப் போன்று பங்களாதேஷ்நாட்டிலும் ஆண்டுதோறும் இடி மின்னல்தாக்குதல்களில் நூற்றுக் கணக்கானோர்உயிரிழக்கின்றனர்.2016 இல் பங்களாதேஷ் அரசு மின்னல் தாக்குதல்களை இயற்கைப் பேரழிவாகப் பிரகடனம் செய்தது. அந்த ஆண்டு மே மாதத்தில்மட்டும் 200 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.அங்கு காடுகள் குறிப்பாக உயர்ந்த மரங்கள் அழிக்கப்பட்டு வருவதே மின்னல் தாக்குதல்கள் அதிகரிப்பதற்குக்காரணம் என்று கூறப்படுகிறது.

உயர்ந்தமரங்கள் இடிமின்னல் மின் வீச்சைவானத்திலேயே தடுத்து விடுகின்றன. பருவநிலை மாற்றம் காரணமாக பூமியும் வளிமண்டலமும் வெம்பமடைந்து வருவதால் உலகின் பல பகுதிகளிலும்இடி மின்னல்கள் தீவிரமாகத் தாக்கத்தொடங்கியுள்ளன என்று வானிலைநிபுணர்கள் கூறுகின்றனர்.

—————————————————————-

குமாரதாஸன். பாரிஸ்.05-08-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More