Home இலங்கை முகம்மட் ஹனீபா சித்தி லைலா, உரப்பையில் சடலமாக மீட்பு!

முகம்மட் ஹனீபா சித்தி லைலா, உரப்பையில் சடலமாக மீட்பு!

by admin

வாழைச்சேனைப் காவற்துறைப் பிரிவில் நேற்று இரவு 905.08.21) பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் காவற்துறைனர் தெரிவித்தனர்.

வாழைச்சேனைப் பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் உரபையில் கட்டப்பட்ட பார்சலை ஒருவர் கொண்டு சென்று வைத்து விட்டு பத்து நிமிடத்தில் எடுத்துக் கொள்வதாகச் சொல்லி விட்டுச்சென்றவர் வராத காரணத்தினால் வர்த்தக நிலைய உரிமையாளர் சந்தேக நபருக்க தொலைபேசி அழைப்பை விடுத்த போது அதை வைத்துக் கொள்ளுங்கள் நான் வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

குறித்த பொதி தொடர்பில் சந்தேகம் கொண்ட வர்த்தக நிலைய உரிமையாளர் காவல் நிலையம் சென்று செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரும் வர்த்தக நிலைய உரிமையாளரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட குடும்பப்பெண் வாழைச்சேனை, அல்லாப்பிச்சை வீதியைச் சேர்ந்த முகம்மட் ஹனீபா சித்தி லைலா என்று அடையாளங் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை காவற்துறைனர் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More