Home இலங்கைஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கைது

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கைது

by admin

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே இரத்மலானையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துவிட்டு திரும்பிய போது காவல்துறை வீதித் தடையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

அநாவசிய ஒன்றுகூடல், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவரைக் கைது செய்வதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் வசந்த முதலிகே உள்ளிட்ட 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More