198
யாழ்ப்பாணம் – தீவகம் வீதியில் பண்ணைப் பாலத்தினுள் தவறி வீழ்ந்த ஒருவர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். அவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது. இரவு 7 மணி தாண்டியும் வீழ்ந்தவரைத் தேடும் பணி தொடர்கிறது.
ஆரம்ப விசாரணைகளில் அவர் யாழ்ப்பாணம் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் பணியாற்றுபவர் என்று தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினா் முன்னெடுத்துள்ளனர்.
Spread the love