தொண்டமனாறு செல்வச் சந்நிதியில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சந்நிதியான் ஆச்சிரமத்தில் சுகாதார அமைச்சினால் நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நேற்றுமுன்தினம்(06) அன்னதானம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்து பொதுச் சுகாதார பரிசோதகரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் ஆச்சிரமம் தனிமைப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் அங்கு பணியாற்றுபவர்கள் மற்றும் சந்திநிதி முருகன் ஆலயத்தைச் சேர்ந்தோரிடம் மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
அதில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் பணியாற்றும் 51 வயதுடைய ஒருவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்திநிதியான் ஆச்சிரமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் செல்வச்சந்நிதி கலாமன்றத்தினால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அன்னதானம் வழங்கிவைக்கப்படுகிறது