157
ஆபத்தான கூரிய ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட காவல்துறைப் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டனர்.
மானிப்பாய் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை, முள்ளி என்ற இடத்தில் இருவரும் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர். அதே இடத்தைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் இருவரே கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு வாள்கள் மற்றும் கஜேந்திரா வாள் கோடாரி என்பன கைப்பற்றன என்று காவல்துறையினா் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் இருவரும் மானிப்பாய் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்
Spread the love