ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்துள்ளதாகத் தலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் ‘தலிபான்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை‘ எனத் தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் (Suhail Shaheen) தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தலிபான் ஒரு சுயாதீன விடுதலைப் படை, கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானின் விடுதலைக்காகவும், வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராடி வருகிறது என்ச் சுட்டிக்காட்டி உள்ளார். அத்துடன் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் அமைதியான அதிகாரப் பரிமாற்றத்திற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை ஜனாதிபதி அஷ்ரப் கானி தனது நாட்டை விட்டு நேற்று வெளியேறியுள்ளார். இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.