வெளிநாடுகளிலிருந்து இலங்கை செல்பவா்களுக்காக அமுல்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது
இன்று (19) முதல் அமுல்படுத்தப்படவுள்ள புதிய விதிமுறைகளுக்கமைய வௌிநாடுகளிலிருந்து செல்லும் அனைவரும் விமான நிலையத்தில் பிசிஆா் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் முடிவுகள் கிடைக்கும் வரை அவர்களை தனிமைப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட விடுதிகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட ஒருவருக்கான பிசிஆா் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை எனின், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய தேவை இல்லை எனவும் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாதவர்கள், பிசிஆா்பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படாத போதிலும் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் புதிய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.