
யாழில் இம்மாதம் 1ஆம் திகதி முதல் இன்றைய தினமான 23 ஆம் திகதி வரையிலான கடந்த 23 நாட்களில் கொரோனோ தொற்றுக்கு உள்ளான 72 பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்தின் கொவிட் – 19 புள்ளிவிபர அறிக்கையின் ஊடாகவே இந்த தகவல் உறுதியாகியுள்ளது.
அதேவேளை யாழ்.மாவட்டத்தில் இதுவரையிலான கால பகுதியில் கொரோனோ தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்னிக்கை இன்றைய தினத்துடன் (23) 201ஆக அதிகரித்துள்ளது. அதில் யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவிலையே அதிகளவான மரணங்களாக 43 மரணங்கள் பதிவாகியுள்ளன
அதேவேளை யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை மேலும் 3 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 83 வயதுடைய பெண் ஒருவரும் யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவரும் யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியைச் சேர்ந்த இஸ்லாமிய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
Add Comment