144
சருங்கல்கந்த என அழைக்கப்படும் பதுளை- ரிதிபான மலைப்பகுதியில் இருந்து மண்டையோடு மற்றும் மனித எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பதுளை காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
குறித்த மலைப்பகுதிக்கு கொய்யாபழம் பறிக்கச் சென்ற சிறுவர்கள் குறித்த மனித எச்சங்களை கண்டுள்ளதனையடுத்து சிறுவா்களது பெற்றோாினால் அது தொடர்பில் நேற்றையதினம் பதுளை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, இன்று காலை சம்பவ இடத்தில் விசேட சோதனை மேற்கொண்ட காவல்துறையினா் அது ஒரு சந்தேகத்துக்குரிய மரணம் என கருதி, விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்
Spread the love