மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவா் ஜெயருவன் பண்டாரவை நாளை காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொய்யான தகவல்களைக் கூறி பொதுமக்களை தவறாக வழிநடத்தியதாக தேசிய ஔடத ஒழுங்குமுறை அதிகாரசபை மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் ஆகியவற்றினால் வழங்கப்பட்ட முறைப்பாடு தொடா்பில் விசாரணை மேற்கொள்வதற்காகவே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
தேசிய ஔடத ஒழுங்குமுறை அதிகாரசபையிலிருந்து தரவை நீக்குவது மற்றும் மருந்து தயாரிப்பது குறித்து ஜெயருவன் பண்டார வெளியிட்ட அறிக்கை தொடர்பான விசாரணைகளுக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது