Home இலங்கை காணாமல் போனோர் விவகாரம் – மரணச் சான்றிதழ், நஷ்ட ஈட்டுடன், பொது மன்னிப்பை கேட்க வேண்டும்!

காணாமல் போனோர் விவகாரம் – மரணச் சான்றிதழ், நஷ்ட ஈட்டுடன், பொது மன்னிப்பை கேட்க வேண்டும்!

by admin


நேற்றைய 30.08.21 காணாமல்போனோர் தொடர்பான சர்வதேச தினத்தில் OMP Sri Lanka ஏற்பாடு செய்திருந்த உரைகள் நிகழ்வில் பேசப்பட்ட முக்கியமான விடயங்கள்

யுத்தம் முடிவு பெற்று 12 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னும் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படாது இருப்பது, எமது நாடு உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் முன்செல்லமுடியாமல் இருப்பதற்கு காரணமாக உள்ளது.

சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என எல்லாத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ், நஷ்ட ஈடு மட்டும் வழங்காது பொது மன்னிப்பு ஒன்றை கேட்பதாலும் வழங்குவதாலுமே இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரமுடியும்.

சர்வதேச ரீதியில் அவ்வாறே இதுமாதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு உள்ளது. – வண. கரவிலக்கொட்டுவ தம்மதிலக தேரர், உதவிப் பணிப்பாளர், பிரிவேன கல்வி, கல்வி அமைச்சு.

1000 நாட்களுக்குள் காணாமல் போனோர் தொடர்பான விடயத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்பதே எனது விருப்பமாக இருக்கின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான நீதியும் இனி அவ்வாறானதொரு நிலை திரும்பவும் ஏற்படாதிருக்க செய்யக்கூடிய அனைத்து வழிகளையும் நோக்கி நாம் செயற்பட்டு வருகிறோம். – கலாநிதி சுரேன் ராகவன் பா.உ

காணாமல் போனோர் தொடர்பான விடயத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டுமென்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெளிவாக இருக்கிறார். நீதி அமைச்சர் என்ற ரீதியில் நானும் இந்த விடயத்தில் எனது பூரண பங்களிப்பை வழங்க்கி வருகிறேன். முன்னைய அரசாங்கத்தைப் போலல்லாது காணாமல்போனோர் அலுவலம், தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் தொடர்பான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகியவற்றை நீதி அமைச்சர் என்றவகையில் நானும் வெளிவிவகார அமைச்சும், கலாநிதி சுரேன் ராகவன் பா.உ , காமினி வெலேபொட பா.உ ஆகியோர் தொடர்சியாக கண்காணித்து, இந்தப் பிரச்சினை தீர்க்கப் படுவதற்கு தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகிறோம். – நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மேலதிக விபரங்களுக்கு https://fb.watch/7IGpfFbAqK/

Video Link – https://fb.watch/7IGpfFbAqK/Highlights of the event were speeches organized by OMP Sri Lanka on the International Day of the DisappearedTwelve years after the end of the war, the issue of missing persons remains unresolved, making our country unable to move forward domestically and internationally. Sinhalese, Tamils , and Muslims are all affected. The issue can only be resolved by asking for and issuing a public apology, not just a death certificate and compensation for the victims. Problems like these have been resolved internationally as well. – Ven. Karawilakottuwa Dhammathilaka Thera, Assistant Director, Pirivena Education, MOE-My desire is to end the issue of missing persons within 1000 days. We are working towards justice for the victims and all possible ways to prevent such a situation from recurring. – Dr. Suren Raghavan M P-President Gotabhaya Rajapaksa is clear that the issue of missing persons must be brought to an end. As the Minister of Justice, I too giving my fullest contribution in this matter. Unlike the previous government, the Office of the Missing Persons, the Office of National Unity Reconciliation, and the Office for Reparations, as the Minister of Justice, I as well as Foreign Ministry and Dr. Suren Raghavan MP and Gamini Welepoda MP have been continuously monitoring and providing the necessary advice to above state institutions and assistance in resolving this issue. – Minister of Justice, Ali Sabri PCFor more information watch the video

��
https://fb.watch/7IGpfFbAqK/

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More