தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒக்சிஜன் கருவியின் துணையுடன் 1,002 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக சுகாதார அமைச்சின் கொவிட் – 19 ஒழிப்பு தொடர்பான இணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்களுக்காக 39,160 கட்டில்கள் காணப்படுகின்ற நிலையில், தற்போது 34,800 கட்டில்களில் கொவிட் நோயாளிகள் உள்ளதாக வைத்தியர் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய நோய்களால் பாதிக்கப்பட்ட 40,353 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் இதுவரையில் 14,154 கொவிட் நோயாளிகள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக வைத்தியர் அன்வர் ஹம்தானி கூறியுள்ளார்.