இலங்கை பிரதான செய்திகள்

நல்லூரான் ரதோற்சவம் – சிறிய தேரில் ஆரோகணித்த வேல் பெருமான்!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  அதிகாலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , முன்னதாக ஆறுமுக சாமி மஞ்சள் அலங்காரத்தில் உள்வீதி உலா வந்தார்.


அதனை தொடர்ந்து வேல் பெருமான் வள்ளி , தெய்வானை சமேதரராய் , சிறிய தேரில் ஆரோகணித்து , உள்வீதியுலா வந்தார். கொரோனோ பெருந்தொற்று காரணமாக இம்முறை ஆலய வருடாந்திர மகோற்சவம் பக்தர்களின் பங்கேற்பின்றி சிவாச்சாரியார்களுடன் உள்வீதியில் இடம்பெற்று வருகின்றன.


அதனால் இம்முறை தேர் திருவிழாவின் போது தேர் இழுக்காது ,  வேல் பெருமான், வள்ளி , தெய்வானையுடன் உள்வீதியில் சிறிய தேரில் ஆரோகணித்து அருள்காட்சி அளித்தார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.