எத்தியோப்பியாவில் தனிநாடு கோரி மத்திய அரசோடு போர் தொடுத்துவரும் டீக்ரே விடுதலைப் போராளிகள் மீது விமானப் படை உதவியோடு நடத்தப்பட்ட கடும் தாக்குதலில் 5,600 போராளிகள் கொல்லப்பட்டதாக எத்தியோப்பியாவின் முன்னணி ராணுவ அதிகாரி ஒருவர் தொிவித்துள்ளாா்.
கடந்த நவம்பர் முதல் டீக்ரே போராளிகளுக்கும், எத்தியோப்பிய மத்திய அரசுக்கும் இடையே போா் நடைபெற்று வருகிறது. அண்மையில் இடம்பெற்ற சண்டைகளில் இந்த உயிரிழப்புகள் நேரிட்டிருக்கலாம் எனத் தொிவிக்கப்படுகின்றது.
மேலும் , 2,300 போராளிகள் காயமடைந்திருப்பதாகவும், 2 ஆயிரம் பேர் வரை கைது செய்யப்பட்டீருப்பதாகவும் அந்நாட்டு ராணுவத் தளபதி தொிவித்துள்ளாா்.
இதேவேளை இந்த சண்டையால் பத்து லட்சம் பேர் வரை பட்டினியால் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியிருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி போராளிகள் அருகில் உள்ள அம்ஹாரா, அபார் பகுதிகளுக்குள்ளும் ஊடுருவத் தொடங்கியுள்ள நிலையில், எத்தியோப்பியாவைப் பிளவுபடுத்த டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி முயற்சி செய்வதாக பாச்சா குற்றம்சுமத்தியுயுள்ளார்.