இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவின் புறநகர் பகுதியில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது 41 பேர் பலியாகியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை அதிகாலை வேளை பெரும்பாலான கைதிகள் தூங்கிக் கொண்டிருந்த சமயம் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
40 கைதிகளை அடைக்கும் வகையில் கட்டப்பட்டிருந்த தீ ஏற்பட்ட அறையில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் கைதான 122 கைதிகள் அடைக்கப்பட்டிருந்ததாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த பன்னிரண்டுக்கும் அதிகமானோர் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தீவிபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சிறைத்துறை செய்தித்தொடர்பாளர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளாா்.