Home இலங்கை யாழில். இன்றும் 06 பேர் கொரோனோவால் மரணம்

யாழில். இன்றும் 06 பேர் கொரோனோவால் மரணம்

by admin

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுழிபுரத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரும் சாவகச்சேரியைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரும் காரைநகரைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரும் யாழ்ப்பாணம் வேம்படியைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவரும் அரியாலையைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை தென்மராட்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மீசாலை மேற்கைச் சேர்ந்த 91 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் கொவிட்-19 தொற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 317ஆக உயர்வடைந்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More