நடிகர் விவேக் மரணம் தொடா்பில் விசாரணை நடத்துமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தது தொடர்பாக விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான சரவணன் எனஹ்பவா் தேசிய மனித உரிமைகள் ஆணையகத்திற்கு முறைப்பாட்டு மனு அனுப்பியிருந்தார்.
அதில் நடிகர் விவேக்கிற்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட விவகாரத்தில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை எனவும், எனவே இது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையகம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோாிக்கை விடுத்திருந்தாா்.
இந்த முறைப்பாடு தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையகம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சமூக ஆர்வலரின் முறைப்பாடு மனு மீது 8 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி, அது குறித்த அறிக்கையை முறைப்பாடுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் எனத் தொிவித்துள்ளது.