இலங்கை பிரதான செய்திகள்

மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவிநீக்கம்

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீது முஹம்மது முஜாஹிர் என்பவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் சபை அங்கத்தவர் பதவியில் இருந்து நாளை (14)   செவ்வாய்க்கிழமை முதல் நீக்கும் வகையில் இன்றையதினம் (13) விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகி உள்ளது.

வடமாகாண ஆளுநர் பியன்சியா சறோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸின் அறிவுறுத்தலுக்கு அமையவே அவர், பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

எவையேனும் தகுதியின்மைகள் உள்ளனவா என்பது பற்றி விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதி அலுவலகர் கந்தையா அரியநாயகத்தின் கீழ் அமைக்கப்பட்ட தனி நபர் விசாரணைக்குழுவினால் விசாரணை செய்யப்பட்டு வாதித்தரப்பின் சாட்சியங்களைக் கவனத்தில் கொண்டதன் பின்பு தனி நபர் விசாரணைக் குழுவின் அவதானிப்புக்கள் மற்றும் தீர்ப்புக்களுடன் என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

சாகுல் கமீது முஹம்மது முஜாஹிர் அவர்கள் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் என்ற வகையில் அப்பதவியில் பணிகள்,கடமைகளை நிறைவேற்றும் போது 1987 ஆண் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் உப பிரிவு 185 (1)(இ),(அ) ஆகிய பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள  குற்றங்களை புரிந்தார் என்பதற்கு போதுமான சாட்சியங்கள் உள்ளன என நான் திருப்தியடைகின்றமையால்  அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.