இருபதுக்கு20 உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின்னா் இருபதுக்கு20 தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக இந்திய கிாிக்கெட் அணியின் தலைவரும் பிரபல துடுப்பாட்ட வீரருமான விராட் கோலி அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைவராக அவா் நீடித்து வரும் நிலையில் இதுவரை ஒரு ஐசிசி கிண்ணத்தையும் அவரால் வெல்ல முடியவில்லை என்பதனால் பல விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் இவ்வாறு இருபதுக்கு20 உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின்னா் இருபதுக்கு20 தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளாா். இதுபற்றி அவா் வெளியட்டுள்ள அறிக்கையில்
கடந்த 8, 9 வருடங்களாக மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகிறேன். 5, 6 வருடங்களாக தலைவராக உள்ளேன். இந்திய டெஸ்ட், ஒருநாள் அணிகளை வழிநடத்த இருபதுக்கு20 உலகக் கிண்ண போட்டிக்குப் பின்னா் இருபதுக்கு20 தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன். இதுபற்றி ரவி சாஸ்திரிமற்றும் ரோஹித் சர்மா ஆகியோாிடம் விவாதித்த பிறகே இம்முடிவை எடுத்தேன். கங்குலி, ஜெய் ஷா, தேர்வுக்குழுவினர் ஆகியோரிடமும் இதுபற்றி தகவல் தெரிவித்துள்ளேன். இந்திய அணிக்காகத் தொடர்ந்து என்னுடைய திறமையை வெளிப்படுத்துவேன் எனத் தொிவித்துள்ளாா்.