Home இலங்கை சிறுவனின் மரணம்- சந்தேகத்தில் சிறுவர்கள் உட்பட 4 பேருக்கு விளக்கமறியல்

சிறுவனின் மரணம்- சந்தேகத்தில் சிறுவர்கள் உட்பட 4 பேருக்கு விளக்கமறியல்

by admin

மன்னார்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை  சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர்  கடந்த வெள்ளிக்கிழமை (17)  தூக்கிட்ட  தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தொடர்பாக சிறுவர்கள் உற்பட 4 பேர் வைது செய்யப்பட்டு எதிர் வரும் வெள்ளிக்கிழமை (24) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


நாகேந்திரன் டிலக்ஸன் எனும் மாணவன் கடந்த  வெள்ளிக்கிழமை காலை கள்ளியடி பகுதியில் அரிசி ஆலை ஒன்றுக்கு அரிசி திரிக்கச் சென்ற நிலையில்  அங்கு பணம் திருடப்பட்டதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில் குறித்த அரிசி ஆலையின் உரிமையாளரின் மகன் சிறுவனின் நண்பரிடத்தில் கூறிய போது அவர் எடுத்திருந்தால் பணத்தை திரும்ப தருவதாக கூறியுள்ளார். பின்னர் அரிசி ஆலையின் உரிமையாளரின் மகன் மற்றும் மகனின் நண்பர்கள் சிலர் இணைந்து குறித்த சிறுவனின் வீட்டிற்கு சென்று சிறுவனை தாக்கியதாகவும் , சிறுவனின் தாய் தாக்க முயன்றவர்களின் காலில் விழுந்து கதறிய போதும் சிறுவனை  தொடர்ந்து தாக்கி விட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பின்னா் வீட்டில் மகனை நித்திரையாக்கி விட்டு  தாயார் குளித்து விட்டு வந்த நேரம் குறித்த சிறுவனை தாக்கியவர்கள் மீண்டும் அவர்களது வீட்டில் இருந்து செல்வதை அவதானித்து தாயார் ஓடி வந்து பார்த்த போது  மகன் தூக்கில் தொங்கிய  நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட இலுப்பைகடவை காவல்துறையினா் குறித்த மரணம் தொடர்பாக கள்ளியடி பகுதியை சேர்ந்த மூன்று 16 வயது முதல் 22 வயதுடைய நான்கு பேரை கைது செய்து,  இலுப்பைக்கடவை காவல் நிலையத்தில் விசாரணைகளை மேற்கொண்டனர்.


மேலும் கைது செய்யப்பட்ட குறித்த 4 பேரையும்  இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (19) இலுப்பைக்கடவை காவல்துறையினா் மன்னார் நீதவான்   முன்னிலையில் முற்படுத்திய போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 4 சந்தேக நபர்களையும் எதிர் வரும் வெள்ளிக்கிழமை 24 ஆம் திகதி  வரை   விளக்கமறியளில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More