ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச்சபை கூட்டத்தொடாில் பங்கேற்பதற்காக அமொிக்கா சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் ஐ.நா பொதுச் செயலாளர் அன்ரனியோ குட்டாரஸ் ( Antonio Guterres) க்கும் இடையில் நேற்றையதினம் நியூயோர்க்கில் சந்திப்பொன்று நடைபெ்றுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இனங்களுக்கிடையில் ஒற்றுமையை பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகர்வதற்கான முழுமையான ஒத்துழைப்பை, மிகவும் நேர்மறையான முறையில் ஐக்கியநாடுகள்சபை இலங்கைக்கு வழங்குமென்று, அன்ரனியோ குட்டாரஸ் , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவி டம்தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிாிவு தொிவித்துள்ளது.
ஐ.நா பொதுச் சபையின் 76ஆவது கூட்டம், நாளை 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது