157
அவுஸ்திரேலியாவின் கிழக்கு மெல்பர்னின் மென்ஸ்ஃபில்ட் நகருக்கு அருகில், 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி புதன்கிழமை காலை 9.15 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சிட்னி, விக்டோரியா, கன்பெரா, தஸ்மேனியா மற்றும் நியூசவுத்வேல்ஸ் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் பலமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தொிவித்துள்ள அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மரிசன் அவுஸ்திரேலியாவில் நில நடுக்கங்கள் அசாதாரணமானவை எனவும் . அது மிகவும் வருத்தமான நிகழ்வு எனவும் கூறியுள்ளார்.
Spread the love