(க.கிஷாந்தன்)
தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 13 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று ( 29.09.2021 ) மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியிலிருந்த மரம் ஒன்றிலிருந்து கலைந்து வந்த குளவி கூடே இவ்வாறு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 பேரும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆண்களும், 11 பெண்களும் அடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.