அதிகாலையில்
தொடங்கும் என்
நடைப்பயிற்சியில்
அன்பாக தொடர்கின்றன
உண்மையான உடனிருப்புக்கள்….
காகமும் குருவிகளும்
பல கதை பறைகின்ற
பொழுதுகளில்
ஒற்றை விசிலடிப்பில்
ஏதேதோ சொல்ல முனைகின்றன
பெயர் தெரியாத
கறுப்பு வெள்ளைக்குருவிகள்….
பச்சைப் புல்லுக்கு
நான் இறைக்கும்
நீர்த்துளிகளில்
நீச்சல் பயிற்சி எடுத்துக்
கொள்கின்றன
ஒருசோடி மைனாக்கள்….
மஞ்சள் பொன்னொச்சியும்
அடுக்கு மல்லிகையும்….
ஆகா!!!!
அற்புதமான நறுமணத்துடன்
ஏன் பொழுதுகளில்
உற்சாகத்தை அள்ளித்
தெளிக்கின்றன…..
என் விரிவுரைகளில்
ஓயாமல்
பங்கேற்றுக் கொள்கின்றன
ஒரு சில ஓணான்கள்…..
சலிப்பில்லாத
தலை அசைப்புக்களில்
நானும் அவையும்
இடையிடையே
தொடர்பு நிலையை
எமதாக்கி கொள்கின்றோம்….
என் தோட்ட
தக்காளியோடும்
வெள்ளக் கொடியோடும்
நாளுக்கு நாள்
நானும்
சேர்ந்தே வளர்ந்து
வருகின்றேன்…..
இப்போது
வண்ணக்குருவிகளின்
இரு இறகுகளினூடும்
நானும்
வானைத்தொடுகின்றேன்
என் வானமும்
விடிகின்றது….
பௌர்ஜா அன்ராசா