யாழ் மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் கிடைக்கப்பெற்ற மழைவீழ்ச்சியில் யாழ் நகரப்பகுதியில் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு நிலைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்
கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் காணப்படும் மழையுடன் கூடிய அச்சுவேலி 12.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும்,பருத்தித்துறை 5.4 மில்லிமீற்றர் , நயினாதீவு 4.1 மில்லிமீற்றர் , யாழ்ப்பாணம் 62.3 மில்லிமீற்றர் , யாழ்ப்பாண நகர் பகுதி 79.0 மில்லிமீற்றர் , நெடுந்தீவு 2.2 மில்லிமீற்றர் , சாவகச்சேரி 10.8 மில்லிமீற்றர், தெல்லிப்பளை 15.5 மில்லிமீற்றர் ,அம்பன் 15.5 மில்லிமீற்றர், திருநெல்வேலியில் 41.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது தெரிவித்தார்
தற்போதுள்ள மழையுடன் கூடிய காலநிலையானது எதிர்வரும் சில நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்