ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது, நான்காவது இடங்களைப் பிடித்த அணிகளான பெங்களூரு ரோயல் சலஞ்சர்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் போட்டியிட்ட நிலையில் . கொல்கத்தா அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்தத் தொடரிலிருந்து பெங்களூரு அணி வெளியேறியுள்ளது.
நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தினை தொிவு செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து, 139 ஓட்டங்கள் என்னும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ஓட்டங்கள் எடுத்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுனில் நரைன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த தோல்வியின் மூலம்பெங்களூரு ரோயல் சலஞ்சர்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது.
ளை சார்ஜாவில் நடைபெறவுள்ள வெளியேற்றுதல் சுற்றின் இரண்டாவது போட்டியில் டெல்லி கப்பிடல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் போட்டியிட்டு வெற்றி பெறும் அணி எதிா்வரும் 15ம் திகதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்கது