186
முல்லைத்தீவில் நேற்றையதினம் இருவேறு இடங்களிலிருந்து, வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. அளம்பில் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் காணியிலிருந்து, துப்பாக்கி ரவைகள், கனரக துப்பாக்கி ரவைகள், எறிகணைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில், நீதிமன்றில் அறிக்கை சமர்பிக்கவுள்ளதாகவும் முல்லைத்தீவு காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை முள்ளியவளை – கேப்பாபிலவு பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து மிதிவெடி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love