பிரதான செய்திகள் விளையாட்டு

கொல்கத்தா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற 2-வது தகுதிச்சுற்று போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டெல்லி கப்பிடல்ஸ் அணியை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது

இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களத்தடுப்பினை தொிவி செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கப்பிடல்ஸ் அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்களை எடுத்தது.

இதனைத் தொடா்ந்து 136 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.5 ஓவா்களில் 7 விக்கெட்டு்களை இழந்து 136 ஓட்டங்களை எடுத்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்தநிலையில் எதிா்வரும் 15ம் திகதி வெள்ளி க்கிழமை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணி சென்னை அணியுடன் போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.