172
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வண. அதுரலியே ரதன தேரர் அபே ஜனபல கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
வண. அதுரலியே ரதன தேரரை கட்சியில் இருந்து நீக்குவதாக குறிப்பிட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளரால் கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து அத்துரெலிய ரத்ன தேரருக்கு பதிலாக கலகொட அத்தே ஞானசார தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Spread the love