Home உலகம் பிரித்தானியாவில் குளிர்காலப் பகுதியில் புதிய வைரஸ் அலை எதிர்பார்ப்பு – நாளாந்தத் தொற்று ஒரு லட்சமாகஅதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை

பிரித்தானியாவில் குளிர்காலப் பகுதியில் புதிய வைரஸ் அலை எதிர்பார்ப்பு – நாளாந்தத் தொற்று ஒரு லட்சமாகஅதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை

by admin

உலகில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும் அதன் மாறுபாடைந்த திரிபுகள் தொடர்ந்தும் தலையெடுத்து வருகின்றன. ஐரோப்பாவில் வைரஸ் பரவலுக்குச் சாதகமான குளிர்கால நிலை தொடங்குவதால் வரும் நாட்களில் தொற்றாளர்கள் எண்ணிக்கை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியாவில் கடந்த ஒரு வார காலமாகத் தினசரி தொற்றாளர்களது எண்ணிக்கை நாற்பது ஆயிரத்துக்கு மேல் பதிவாகிஉள்ளது. கடைசியாக நேற்று அந்த எண்ணிக்கை 49,139 ஆக உயர்ந்துள்ளது.பிரித்தானிய சுகாதார அமைச்சர் சஜித் ஜேவிட் (Sajid Javid) பிரதமரின் டவுணிங் வீதி அலுவலகத்தில் இன்று நடத்தியசெய்தியாளர் சந்திப்பின் போது நாடு குளிர்காலத்தில் புதியதொரு தொற்றுஅலையைச் சந்திக்கும் என்ற எச்சரிக்கையை விடுத்தார்.

பனிக் காலத்தில் ஒருநாள் தொற்று ஒரு லட்சம் வரை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.பனிக் காலப்பகுதியில் முன்னெடுக்கவேண்டிய மாற்று சுகாதாரத் திட்டம்ஒன்றை(Covid Plan B)பிரித்தானியாவில் அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர்.

மாஸ்க், சமூக இடைவெளி போன்ற விதிகளை மற்றொரு தடவை இறுக்கமாக நடைமுறைப்படுத்துவது உட்பட பல வழிமுறைகள் அதில் அடங்கியுள்ளன.தொற்றாளர் எண்ணிக்கை 50 ஆயிரம் வரை உயர்ந்துள்ள போதிலும் கடந்தகுளிர்காலப் பகுதியில் நிகழ்ந்தமை போன்று உயிரிழப்புகள் இன்னமும்அதிகரிக்கவில்லை. தடுப்பூசிகள் நன்குசெயற்படுவதையே இது காட்டுகின்றதுஎன்று அமைச்சர் சஜித் ஜேவிட் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்ரா வைரஸ் திரிபின் இன்னொரு வடிவமே தற்சமயம் பிரித்தானியாவில் பரவிவருவதாகக்கூறப்படுகிறது. பிரதமர் பொறிஸ் ஜோன்சன் சமூக இடைவெளி உட்பட சகல கட்டுப்பாடுகளையும் நீக்குகின்றஅறிவிப்பை “Freedom Day” என்ற பெயருடன் கடந்த ஜூலை 19 ஆம் திகதி அறிவித்திருந்தார். அதன் பிறகு நாடு முழுவதும்முழுமையான இயல்பு நிலை போன்று கட்டுப்பாடற்ற தன்மை காணப்பட்டது.

பிரான்ஸுடன் ஒப்பிடும் போது பிரித்தானியாவிலும் சனத் தொகையில் 73 வீதமானவர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியையாவது பெற்றுள்ளனர். ஆயினும் அங்குதொடர்ந்தும் தொற்றாளர்களது எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பிரான்ஸில்நாளாந்த தொற்றுக்கள் 4ஆயிரத்து 500ஆக உள்ள நிலையில் பிரித்தானியாவில் அது பத்துமடங்கு அதிகமாகக் காணப்படுகிறது. ஜரோப்பாவில் வைரஸ் தடுப்பூசி ஏற்றும் முன்னெடுப்புகளை முதலில் ஆரம்பித்தநாடு பிரித்தானியாவே ஆகும். ஆனால் சொந்த தயாரிப்பாகிய அஸ்ராஸெனகா தடுப்பூசியின் எதிர்ப்புத் திறன், ஏனைய பைஸர்போன்ற மெசஞ்சர் ஆர்என்ஏ தடுப்பூசி களது திறனை விடக் குறைவானது என்பது ஆய்வுகளில் தெரியவந்திருந்தது.புதிய திரிபுகளின் தொற்றை எதிர்ப்பதில்அஸ்ராஸெனகா தடுப்பூசியின் செயற்றிறன் குறைவாக இருப்பதால் மூன்றாவதுஊக்கித் தடுப்பூசி ஏற்றும் திட்டமும் அங்குமுன்னெடுக்கப்பட்டுவருகிறது.

—————————————————————–

குமாரதாஸன். பாரிஸ்.20-10-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More