குறிப்பாய் இன்றைய நவநாகரீக காலத்தினுள் புகுத்தப்பட்ட நாம் பல்வகை விடயங்களுக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறோம். காலனிய/நவீனத்தின் உத்வேகத்தினால் எம்மிடையே எமக்குள்ளேயே இருந்தஃஇருக்கின்றவை அத்தனையும் அழித்தொழிக்கும் ஆதிக்க மனப்பான்மைக்குள்புகுந்து சீரழிந்தும்/சீரழித்தும் கொண்டிருக்கிறோம். எமக்குள் இருந்து எம்மையே அவர்கள் பக்கம் சாய்த்தெடுத்து இரண்டரக்கலந்து இறுதியில் எம்மையே தாழ்த்தும் பாசிச சமயவழிவந்த பார்ப்பானை காலனியவாதிகள் என்றால் ஏற்கமறுக்கும் சமூக மனோநிலையின் மத்தியில் வாழ்ந்தும் கொண்டிருப்பது எம் உள்@ர் நிலைபற்றி இன்னும்,இன்னுமும் அதீத அளவில் சிந்தனை கொள்ளத்தூண்டுகிறது. ஆக அடித்தளந்தொட்டு எமக்குள்ளேயே எம் நிலையை உறுதிப்படுத்த மீட்டுருவாக்கம் செய்யவேண்டிய நிலையை சிந்தனை கொள்ளும் மனப்பான்மையில் நின்றுகொண்டு உள்@ர் செயற்பாட்டின் தேவையினையும் அதன் சாத்தியத்தையும் பேசவேண்டியது எம் கடப்பாடு.
இது தற்கால கொரோனாப்பிடியில் பீடிக்கப்பட்டு முடக்கப்பட்ட/முடக்கம் செய்யப்பட்ட நாட்டின் பொருளாதார இயங்கியல் தன்மையை கருத்தில் கொண்டும் பேசவேண்டிய ஒன்றும்கூட இத்தனையையும் அசாத்தியம் என நினைக்கத் தோன்றியதை சாத்தியப்படுத்தும் வண்ணம் இன்றைய ஆட்சியாளர்களின் விலைப்பட்டியலும், இறக்குமதித்தடையும் ஓர் உந்துசக்தியாய் நம் வாழ்விற்கானதாய் எடுத்துச் செயற்படுத்தவேண்டியது அவசியம் இல்லை எனில் எமது நிலை பரிதாபம் என்பது உறுதி. இனி உள்@ர் உற்பத்தியின் தேவை எவ்வாறு என்பது பற்றிய இற்றைய நிலையை சற்று அலசுவோம். பால்மா தட்டுப்பாடு அல்லது குறைவு ஏன் இல்லை என்றே பேசப்படுகிறது மறுப்பின் இருந்தும் அதீத விலையாக தொடர்ந்தேர்ச்சியாய் பால்மாவின் தேவை. ஆனால் இன்றைய நிலையில் அது அசாத்தியம் உள்@ரில் பெறப்படுகின்ற ஆரோக்கியமான பால்வகை எம்மிடையே ஏராளமாய் கிடப்பது நான் அறிந்த வரையில் உண்மையுமாய் இருக்கலாம். அப்போ இதனை தன் காலடியில் வைத்து விட்டு கால் கடுக்க கடும் வெயிலினில் நிற்பதற்கான காரணம் எதன் மீது கொண்ட மோகம். அன்றி ஒரு லீட்டர் பாலின் விலை?
நீங்கள் சொகுசாய் குடிப்பதற்கு என போர்த்தலில் அடைக்கப்பட்ட இலவசத் தண்ணீரின் விலையிலும் முற்பது ரூபாய் அதிகம் என்பதினாலோ? ஏன் உள்ர் உற்பத்தியினதும் உடலினதும் ஆரோக்கியத்திற்காக ஒரு நூறு ரூபாய் செலவு செய்வது கஞ்சத்தனமோ அன்றி நவநாகரீக மயக்கமோ நான் உணர்கிலேன். அடுத்து சி-லின்டர் இலகுவாய் சமைப்பது என்னமோ உண்மைதான் ஆனால் ஓர் நாள் முந்நூறு ரூபாய் சம்பளம் பெற்றுக் கொண்டு குடும்பத்தை நடாத்தும் ஏழ்மையவர் வாழும் நாட்டில் புதிதாய் கட்டிய தாமரைக் கோபுரமாய் உயர்ந்து நிற்கும் விலையை கொண்ட சி-லின்டரை பாவனைக்கு உட்படுத்துவது முற்றிலும் முடியாத காரியம். ஆக மண்ணிணால் ஆக்கப்பட்ட மண் அடுப்பினில் கலைத்துவமாய் வடிவாய் விறகுகளை கொண்டு சமைத்து உண்பது முற்றிலும் முடியாத காரியமில்லையாயினும் சற்று முயற்சி செய்வதில் குற்றம் இல்லையே. நாம் மண்மேட்டில் புரண்டுபடுத்து கரிகளை பூசி உருண்டுபுறண்டு விளையாடியவர்களாக இருந்தும் எத்தணிப்பதில் தப்பில்லை. ஆக இங்கும் உள்@ர் உற்பத்தியின் விளைவுகளை பயன்படுத்த வாய்ப்பாய் இருப்பது என்னமோ உண்மையும் அதன் தேவையும் இன்றியமையாதவையும்.
மேலும் வீட்டுக்குள்ளேயே இருக்கின்ற சிற்சிறிய இடங்களினுள் கிடைக்கப்பெற்ற மூலமரவு விதைகளைக் கொண்டும் பொழுது போக்காய் தோட்டம் செய்யும் முறைமையைக் கண்டு கிடைக்கப்பெற்றதை நட்டும் நடப்பண்ணியும் பயன்பெறும் ஓர் செயற்பாட்டுத்தளத்தை உருவாக்குவது என்னமோ எம் நன்மைக்கானவையே. அதனை செயற்படுத்தும் வண்ணம் அற்புதமாய் வீட்டுக்குள்ளே சிறுவர்கள் முதல் பெரியோர் என அனைவரையும் சேர்ந்து விளையாட்டாய் செய்யின் அகம் மகிழ்வாயும் அதீத பயனையும் பெற்றெடுப்பதென்னமோ உண்மை தான் போலும் இதுவே இன்றைய இயங்கு தளத்திற்கான தேவையும் கூட. வீட்டிலே இருக்கும் பட்சத்தில் சரளமாய் அத்துணை பெரியவர்களிடமும் பேசிப்பழகி அவர்கள் காலத்து கதைகளையும், பேச்சுக்களையும் பேசிக்கதைத்தும் அத்தனையும் செயற்பாட்டுத்தளத்திற்கு கொணர்தல் ஆக்கபூர்வமாய் அமையப்பெறலாம். குறிப்பாய் அன்று அவர்கள் காலத்து திண்பண்டங்கள், வாய்வழிக்கதைமரவுகள், பொழுதுபோக்கு ஆற்றுகைகள், விளையாட்டம்சங்கள் ….என அத்துணை வாழ்வியல் அம்சங்கள் கொண்டமைந்த ஆற்றுகையை செயற்பாட்டுத்தளத்தில் பிரயோகிப்பதற்கான சிந்தனைத் திட்டங்களை வகுத்தல். இதன்ஊடு தானும் இன்புற்று தம்மைச் சுற்றியுள்ளவர்களும் இன்புறும் வண்ணம் அவர்களிடமும் கொண்டு சேர்ப்பதற்கு ஆவணை செய்தல் என்பதெல்லாமே இன்றைய தேவையும் கூட.
ஏலவே செய்துகொண்டிருக்கும்/செய்யவிருக்கும் எம் பிரதேசத்து செயற்பாட்டாளர்களுக்குரிய உத்வேகத்தையும் செயற்பாட்டினால் வெளிவந்த விடையப்பரப்புகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்க்கும் திட்ட முன்மொழிவுகளையும் நடைமுறைப்படுத்தி அதில் நாம் வாழ்ந்து காட்டுவதிலும் கூட இவை அனைத்தும் சாத்தியப்பாடுடையவையாகவே இருக்கிறது. “இருப்பதை இல்லாமல் ஆக்கி அத்தனையும் கிடைக்கப்பெற்றதாய் உணரவைத்து நட்டாற்றில் விட்ட கதை…” தேவையை உடனுக்குடன் நிறைவுறுத்தியும்/பூர்த்திசெய்தும் கொடுக்கப்படுகின்றவற்றின் கைகளில் தங்கிவாழும் மறைமுக ஆதிக்கச்சிந்தனை மரபில் பிணைக்கப்பட்ட நாம் என்றோர்நாள் தனித்துநின்று வாழ்ந்துகாட்டியவை வரலாறாய்நிற்பது என்னாமோ பேராச்சரியமே. சுகபோகங்களுக்கும் உடனடித்தீர்வுகளுக்கும் பழக்கப்பட்ட/பழக்கப்படுத்தப்பட்ட எம்சமூகம் இன்று இழந்துநிற்பவை எக்கச்சக்கம். மூலப்பொருளை முடிவுப்பொருட்களாக்கி தம்தேவைபோக மற்றையவையினை பகிர்ந்துண்டும் ஏற்றுமதிக்கும் பொருளாதார இயங்குதளத்திற்கு உறுதுணையாய் இருந்த/இருக்கின்ற உள்@ர் செயற்திறன்களைகொன்று அதன்சாயலில் புதுவிதமாய் அறிமுகப்படுத்தும்/முன்னிறுத்தும் தொழில்நுட்டத்தின் கட்டுப்பாட்டிற்குள் சிக்கிக்கொண்டு இக்கட்டானநிலையில் மீளஎத்தணிக்கும் சமூகமாய்கிடப்பது ஏலவே இருந்தனவற்றின் தேவையையும் அதனவிஸ்தரிப்பினையும் சாத்தியம் எனக்கொள்ளும் மனோநிலைக்கு மாற்றப்பட்டுள்ளமைஃமாறவேண்டியதும் காலத்தின் கட்டாயம்.
ஒன்றின் திருத்தம் இன்று அத்தனை விலை உயர்ந்தவையையும் முழுதுமாய் மாற்றியமைக்க தூண்டும் துர்பாக்கிய சிந்தனை. திருத்தங்களையும் பழுதுகளையும் பார்த்து நுணுக்கமாய் செய்துகொடுக்கப்பட்ட உள்@ர் தொழில்நுட்பத்தினை கேலிசெய்து வருவதும் வீண் விரையப்படுத்துவற்கெனவே உருவாக்கப்படுகின்ற நவீன மாறுதல்களையும் சற்று திரும்பிப்பார்க்க வைக்கின்றது என்றாலும் பொய்யாகாது. நூல்அறிவு திறத்தின்ஊடு பயிற்றுவிக்கப்படுகின்ற தொழிற்துறை வல்லுணர்களே வியந்துபார்க்கும் புதுவித படைப்புகளையும் புத்துயிர்ப்பு விடையங்களும் அலக்களிக்கப்பட்டு மீண்டும் காண்பதற்கு ஏற்றால்போல் கவர்கின்ற தன்மையையும் திணிக்கின்ற மாயைஉலகு கட்டுடைபடவேண்டிய சிந்தனையாகும்.
ஆக ஏற்புடையவை சார்ந்த தொழிற்துறைகளும் தொழில்வல்லுணர்களினதும் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையினிலே ஆட்சியாளர்களின் பார்வையை அவர்கள் மீது திருப்பமுனைவதும் அவர்களின் வாழ்வை மாறுதல் அடையப்பண்ணுவதும் பேசவேண்டிய தேவையை எமக்கு நிர்பந்திப்பது காலத்தின் மாறுகையின்ஊடு கண்டுகொள்ளப்பட வேண்டியவையே. எவ்காலத்தில் எவ்வாறாய் சிந்திப்பது என்பதை நடைமுறையே கற்றுத்தருகின்றது என்னமோ உண்மைதான். இதனால் மண்ணால் ஆன பொருட்களை செய்து கொண்டிருக்கின்ற சுய தொழிலதிகாரிகள் வாழ்வில் ஒளியும் வீசும். எமக்கு இருக்கும் அதே உரிமை, சுதந்திரம் இன்னும் ஒருவருக்கும் சாத்தியமே என்பதைப்புரிந்து கொள்ள வேண்டியது எம்கடமை. நமக்கானதை ஓர் தளத்திலும் மற்றையதை இன்னும் ஓர் தளத்திலும் வைத்துப்பார்க்கும் காழ்புணர்சி வழிநின்று சிந்தனை கொள்ளத்துடிக்கும் எம்மவர்களின் ஆதிக்க மனநிலை சுக்குநூறாய் தகர்க்கப்பட வேண்டியதும்கூட. இவ் உலகில் உள்ள அத்துணை உயிர்க்கூறுகளும் உரிமைகள் கடமைகளுடன் வாழவழிவகை செய்து கொடுக்கும் சிந்தனையின் உச்சத்தில் உள்@ர் செயற்திறனின் தேவையும் சாத்தியமும் என்பதின் வாயிலாக பேசப்படவும் எழுதப்படவும் கட்டுடைபட வேண்டியதும் என்பதை நிலை நிறுத்தியே நிற்கிறது இன்றைய காலம்.
கு.மதுசாந்.