நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழான நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை இடைவிலகியவர்களுக்கான தடுப்பூசி எதிர்வரும் 30ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
22.10.2001முதல் 21.10.2005 வரை பிறந்தவர்கள் பாடசாலை செல்லாதவர்கள் (இடைவிலகியோர்) எதிர்வரும் சனிக்கிழமை காலை 09 மணி முதல் மதியம் 12 மணி வரை கோண்டாவிலில் அமைந்துள்ள நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் , தடுப்பூசி பெற வருவோர் தேசிய அடையாள அட்டை அல்லது பிறப்பு சான்றிதழின் பிரதியுடன் ,வரவேண்டும் எனவும் , 18 வயதை பூர்த்தி செய்யாதவர்கள் பெற்றோர்களுடன் வர வேண்டும் எனவும் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
அதேவேளை நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் உள்ள பாடசாலைகளில் தரம் 11 மற்றும் தரம் 12இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் பைசர் தடுப்பூசி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். .
யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரியில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமையும் , திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் வியாழக்கிழமையும் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது என வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
எனவே நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் தரம் 11 மற்றும் தரம் 12 மாணவர்கள் தங்கள் பாடசாலை அதிபருடன் தொடர்பு கொண்டு, தங்களுக்கு உரிய நேரத்தினை ஒதுக்கி கொள்ளுமாறும் , அத்துடன் 18 வயதிற்கு குறைந்த மாணவ்ர்களை பெற்றோரினால் சம்மதம் வழங்கும் விண்ணப்பத்தினை அதிபரிடம் பெற்று , அதனை பூரணப்படுத்திக்கொண்டு சமூகமளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.