பிரதான செய்திகள் விளையாட்டு

T20 உலகக் கிண்ணம் – இங்கிலாந்து – அவுஸ்திரேலியா வெற்றி

டுபாயில் நேற்றையதினம் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டியின் சூப்பர்-12 குரூப்-1 சுற்றில் இங்கிலாந்து அணி. மேற்கிந்தியதீவுகள் அணியை 6 விக்கெட் வி்த்தியாசத்தில் வென்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியதீவுகள் அணி 14.2ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 55 ஓட்டங்களை எடுத்தது. இதனையடுத்து 56 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 8.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 56 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து அணி குரூப்-1 பிரிவில் புள்ளிப்பட்டியில் 3.90 அளவுக்கு உயர்த்தி ரன்ரேட் உச்சத்துக்கு சென்றுள்ள அதேவேளை மேற்கிந்தியதீவுகள் அணியின் ரன்ரேட் மைனஸ் 3 அளவுக்கு சென்றுள்ளது. இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் மொயின் அலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

அதேவேளை அபு தாபியில் நேற்று நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் குரூப்-1 பிரிவில் தென்னாபிரி்க்க அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி வென்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரி்க்க அணி, 9 விக்கெட் இழப்புக்கு 118 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து 119ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.