இன்றைய ஆட்சியாளர்களின் உருவப்பொம்மைகளை மாத்திரமே மக்கள் அடிப்பதாகவும், எரிப்பதாகவும் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ர, எதிர்வரும் நாள்களில் ‘ராஜபக்ஸ’ என்ற குடும்பப் பெயர் கொண்டவர்கள் வீதிக்கு இறங்க முடியாத நிலை ஏற்படும் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (24.10.21) இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பென்டோரா அக்காவும் அவரது கணவரும் சேர்ந்து 160 மில்லியன் டொலர் மோசடியாக சம்பாதித்துள்ளனர்.
எனவே, பென்டோரா அக்காவின் பணத்தை எடுத்தால் உரப்பிரச்சினை, ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை, அரிசி பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்றார். இவர்களின் வீடு, பிள்ளைகள் உள்ளிட்டவர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். எவ்வளவு சரி சம்பாதிக்கவே ஒவ்வாரு காலத்துக்கும் இந்த ராஜபக்ஸ குடும்பத்தினர் இலங்கைக்கு வருகிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இவர்களுக்கும் இங்கிருந்து வெளிநாடுகளில் பணிபுரியும் பெண்களுக்கும் சிறு வித்தியாசமே உள்ளது. வீட்டுப் பணிப்பெண்கள், தாம் சம்பாதிக்கும் பணத்தை இலங்கைக்கு அனுப்புகிறார்கள். ஆனால், ராஜபக்ஸ குடும்பத்தினர் இங்கிருந்து அமெரிக்காவுக்க கொண்டு செல்கின்றனர் என்றார்.
அரிசி, பருப்பின் விலை பற்றி பற்றி பேச தன்னை ஜனாதிபதியாக நியமிக்கவில்லை கோட்டாபய ராஜபக்ஸ கூறுகிறார். ஆனால் நியமிக்கப்பட்டவுடனேயே அரிசி கடைகளுக்குச் சென்று அரிசியின் விலையை கேட்டார். நாட்டு மக்களிடம் பருப்பு, செமன் பற்றி பேசினார். ”எனவே கடவுளே! உண்மையில் இன்று என்ன பேசுகிறாம். நாளை என்ன பேசுகிறோம் என்று கூட இந்த ராஜபக்ஸ குடும்பத்துக்கு தெரியாமல் போய்விட்டது. ஆகவே எழுதி வைத்துக் கொள்ளுங்கள் சந்தர்ப்பம் வரும் போது, ராஜபக்ஸ குடும்பத்தினர் ஒவ்வொருத்தராக கையில் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு, நாட்டை விட்டு தப்பியோடுவார்கள். அவர்கள் அவ்வாறு தப்பியோடாவிட்டால் இனி ஊடக சந்திப்பை நடத்துவதில் பயனில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.