Home இலங்கை நாளை தேர்தல் நடைபெற்றால் அரசாங்கம் தோற்றுவிடும்!

நாளை தேர்தல் நடைபெற்றால் அரசாங்கம் தோற்றுவிடும்!

by admin

”விமர்சனங்களுக்கு உள்ளாகுவது ராஜபக்‌ஸ குடும்பத்துக்கு சாதாரணமாகிவிட்டது என தெரிவித்த விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஸ , விமர்சனங்களுக்கு மத்தியில் எமது கிராமங்களுக்கு நிச்சயம் நாம் செல்வோம்” என்றார்.

பதுளையில் மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அவர், ”விவசாயத்துடன் தொடர்பில்லாதவர்களும், சேதன பசளை தொடர்பில் தெளிவில்லாதவர்களும் தான் பெரும்பாலான போராட்டங்களில் ஈடுப்படுகிறார்கள். சிறந்த திட்டங்களை செயற்படுத்தும் போது சவால்களும்,முதற்கட்ட தோல்விகளும் ஏற்படுவது சாதாரணமானது. தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ இந்த திட்டத்தை செயற்படுத்தவில்லை. நாளை தேர்தல் ​நடைபெற்றால் அரசாங்கம் நிச்சயம் தோல்வியடையும். விஷத்தை உண்டு மக்கள் இறந்தாலும் பறவாயில்லை. தனக்கு தேர்தல்வெற்றிதான் முக்கியமென ஜனாதிபதி கருதவில்லை.”

”மக்களின் நலனை உடல் ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு தீர்மானம் எடுக்கும் அரச தலைவர்கள் குறைவாக உள்ளனர். சேதன பசளையை கொண்டு பெரும்பாலான விவசாயிகள் நெற்செய்கையிலும் ,மரக்கறி விவசாயத்திலும் ஈடுப்படுகிறார்கள். சேதன பசளை பயன்படுத்தி விவசாய நடவடிக்கையினை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளார்கள்.

சேதன பசளை திட்டம் தற்போது அரசியலாக்கப்பட்டுவிட்டது.சேதன பசளை திட்டம் தொடர்பில் ஒரு சில குறைப்பாடுகள்காணப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இதனை தேசிய பிரச்சினையாக கருத்திற்கொண்டுஅனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” என்றார்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More