அதிபர், ஆசிரியர்கள் ஆறு கோரிக்கையை முன்வைத்து இன்று யாழ்ப்பாணம் வடமராட்சியில் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கொழும்பு கோட்டையில் முன்னெடுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தே மதியம் 1.45 மணியளவில் வடமராட்சி உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு முன்னால் ஒன்று கூடிய அதிபர் ஆசிரியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு காணப்பட வேண்டும், இலவசக்கல்வியை பறிக்காதே, கல்விக்காக ஆறு வீத ஒதுக்கீடு வேண்டும், இலவசக்கல்வி பாதுகாக்கப்பட வேண்டும்,கல்வி இராணுவமயப் படுத்துவதை நீக்கவேண்டும் உட்பட பல கோசங்களை எழுப்பியதுடன் சுலோக அட்டைகளையும் தாங்கி இருந்தனர்.
பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளை மாணவர்களின் நலனுக்காக கைவிட்டு பல்வேறு புதிய வழிமுறைகளை கையாண்டு போராட்டம் நடக்குமென அதிபர் ஆசிரியர் தொழில்ற்சங்கங்கள் நேற்று எச்சரித்த நிலையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.