Home இலங்கைமனைவியை குத்திய கணவன் தலைமறைவு –

மனைவியை குத்திய கணவன் தலைமறைவு –

by admin

குடும்ப தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திய கணவர் தலைமறைவாக உள்ள நிலையில் , அவரை கைது செய்வதற்கு காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வலி.வடக்கு தையிட்டி பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் நேற்றைய தினம் மாலை கணவன் – மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

அதன் போது, 22 வயதான தனது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்திய கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளார்.

கத்திக்குத்து காயத்திற்கு உள்ளன மனைவியின் அவல குரல் கேட்டு , அயலவர்கள் அவரை மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளத்துடன், தலைமறைவாகி உள்ள கணவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More