கெரவலப்பிட்டிய யுகதனவி அனல் மின்நிலையத்தின் அரசாங்கத்துக்கு சொந்தமான 40 சதவீத பங்குகளை, அமெரிக்காவை தளமாகக் கொண்ட நியூ போட்ரெஸ் எனெர்ஜி நிறுவனத்துக்கு வழங்குவதற்கான அமைச்சரவை தீர்மானத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால் (ஜே.வி.பி) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் வசந்த சமரசிங்க ஆகியோரே இன்றையதினம் (26.10.21) ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
சட்டத்தரணி சுனில் வட்டகல ஊடாகத் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அமைச்சரவை, இலங்கை மின்சார சபை, நியூ போட்ரெஸ் எனெர்ஜி பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட 43 பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.