200
மிருசுவில் பகுதியில் அயல்வீட்டார் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து மேற்கொண்ட தாக்குதலில் தம்பதியினர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மிருசுவில் தவசிக்குளம் பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் , 69 வயதான கணவனும் , 52 வயதான அவரது மனைவியும் காயமடைந்துள்ளனர். அயல்வீட்டார் தம் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தம் மீது தாக்குதலை மேற்கொண்டதாக தாக்குதலுக்கு இலக்கான தம்பதிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கொடிகாம காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love