Home இலங்கை கலைஞர்கள் மீதான நீதிமன்ற வழக்குகளும், படைப்புக்கள் மீதான தடைகளும் – பௌர்ஜா அன்ராசா.

கலைஞர்கள் மீதான நீதிமன்ற வழக்குகளும், படைப்புக்கள் மீதான தடைகளும் – பௌர்ஜா அன்ராசா.

by admin

காலனித்துவ காலத்தில் மத்தியதர வர்க்கத்தினர் மேலெழுந்து சிந்தனை ரீதியாக காலனித்துவ விடயங்களை உள்வாங்கியமையினால் உள்ளுர்க்கலைகள்; சுதேசப்பண்பாடுகள் தரங்குறைந்தவை என்ற கருத்தியலில் கலைகளும் கலைஞர்களும் பின் தள்ளப்பட்டனர். இக்கலைகள் எழுதப்படாத சட்டங்கள், விழுமியங்கள், ஒழுக்கக் கட்டுப்பாடுகள், வழக்காறுகள் என்ற விடயங்களினை கருத்தில் கொள்ளப்பட்டு புறந்தள்ளப்பட்டன. இதனால் காலனித்துவ காலங்களில் கலைகள் வளர்ச்சியடையாமலும் கலைஞர்களும் அவர்களது படைப்புக்களையும் புறந்தள்ளி அவமதிப்புச் செய்யும் நிலையும் ஏற்பட்டது.


இவ்வாறான சட்டங்களும் விழுமியங்களும் கலைஞர்களைக் கைது செய்தல், அவர்களது படைப்புக்களைத் தடை செய்தல், கலைஞர்களுக்கு மக்கள் மத்தியில் இருந்த மதிப்பு நிலையை இல்லாமல் செய்தல், உடல், உள ரீதியாக கலைர்களை அடக்குதல் என்ற செயற்பாடுகளினால் கலைஞர்களையும் அவர்களது படைப்புக்களையும் இல்லாமல் செய்கின்றது.
ஒரு படைப்பாளிக்கு ஜனநாயக நாடொன்றில் சுயமாக எழுதவும், சமூக ரீதியாக சிந்திக்கவும,; சுதந்திரமான படைப்புக்களை உருவாக்கவும் முழுஉரிமை உண்டு. ஆனால் இன்றைய காலங்களில் முற்போக்கு சிந்தனைகளை தமது படைப்புக்களில் கொண்டு வர முனைந்த கலைர்களுக்கும் அவர்களின் படைப்புக்களுக்குமான தடைகளை பல்வேறு நாட்டு அரசாங்கங்கள் முன்னெடுத்து வருகின்றன. அவ்வாறான படைப்புக்கள் மூலம் மக்கள் சிந்தனை ரீதியான மாற்றங்களைப் பெற்று சுதந்திர நிலை பெற்று விடுவார்கள் என்ற அச்ச நிலையே இந்த அடக்குமுறைகளுக்கு முக்கியமான காரணங்களாக அமைகின்றன. இது காலனித்துவ சிந்தனைகளுடாக வந்த முக்கியமான நடவடிக்கையாகும்.


இவ்வாறு தமது படைப்புக்களுக்கான தடை விதிக்கப்பட்டவர்களாக பலர் காணப்பட்டாலும் பெருமாள்முருகன், அருந்ததிராய், ஆ.மு பாகவதர் N.S கிருஸ்ணன் ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற வழக்குகள் மிக முக்கியவையாக காணப்படுகின்றன.

பெருமாள் முருகன் வழக்கு
தமிழ்நாடு நாமக்கல் மாவட்டத்திற்கு அருகே திருச்செங்கோடு எனும் ஊரில் சுதந்திரத்திற்கு முன்னர் நடந்த சம்பவங்களின் பின்னணியில் எழுதப்பட்ட நாவல்தான் மாதொருபாகன். பிள்ளைப்பேறு இல்லாத பெண்ணுக்கு மற்றும் ஒருவர் மூலம் கருத்தரிக்கச் செய்து பிள்ளைப்பாக்கியம் பெறுதல் என்பது சம்பிரதாயமாக இருந்ததாகவும் அதனைப் பின்னணியாகக் கொண்டதே இந்நாவலின் கதையாகும். திருச்செங்கோட்டு பிரதேச மக்களின் வாழ்வியல் நடைமுறைகளையும் நம்பிக்கைகளையும்; கேள்விக்குள்ளாக்கியது. என்ற காரணத்தினாலேயே இந்நாவலுக்கு தடைவிதிக்கப்பட்டது.


இவ்வழக்கின் இடர்பாடுகளினால் எழுத்தாளரான பெருமாள் முருகன் பல்வேறு இன்னல்களை எதிர் கொண்டிருக்கிறார். உடல், உளக் கருத்தியல் ரீதியான பாதிப்பை எட்டிய நிலையை இவர் மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார். இவ்வாறான காலங்களில் தான் அனுபவித்த அவல நிலையை இவர் தனது அடுத்த படைப்பான ‘பூனாச்சி அல்லது வெள்ளாட்டின் கதை’ நாவலின் முன்னுரையில் எடுத்துரைத்துள்ளார


‘இந்த நாவலை எழுத மிகக் குறுகிய காலமே எடுத்துக் கொண்டேன். கடந்த மூன்று மாதங்கள் ஒரு நொடி போலக் கழிந்தன. அந் நொடிக்குள் அனுபவித்த குழப்பங்கள், சஞ்சலங்கள், துயரங்கள் போன்றவற்றை ஓரங்கட்டிவிட்டு பெருமகிழ்ச்சி ஒன்று எனக்குள் நிறைந்திருக்கிறது. அதற்குக் காரணம் பூனாச்சி அவளை எழுத்தில் உருவாக்கிவிடுவது எனக்கு பெரும் சவாலாக இருந்தது. முதல் விசயம் எனக்குள் இருந்த தயக்கம் அதைப் பூனாச்சியால் உடைக்க முடியும் என்று நம்பினேன். நம்பிக்கை வீண்போகவில்லை என்று தோன்றுகிறது.


புதைந்திருக்கும் கதைகள் எத்தனை காலம்தான் விதையுறக்கத்தில் ஆழ்ந்திருக்கும். மனிதர்களைப்பற்றி எழுத அச்சம். தெய்வங்களைப் பற்றி எழுதவோ பேரச்சம். அசுரர்களைப் பற்றி எழுதலாம். அசுர வாழ்க்கையும் கொஞ்சம் பழக்கம் தான். இப்போதைக்கு தொட்டுக் கொள்ளலாம்.
ஆழ அறிந்தவை ஐந்தே ஐந்து விலங்குகள் தாம். அவற்றில் நாயும், பூனையும் கவிதைகளுக்கானவை. மாடு, பன்றி ஆகியவற்றைப் பற்றி எழுதவே கூடாது. மிஞ்சியது ஆடு ஒன்றுதான். பிரச்சனை தராத அப்பிராணி ஆடு ஒன்று தான்……’ என்று தொடர்கிறது இவ் முன்னுரை.


இவ் உihப்பகுதியானது கலைஞர் ஒருவருக்கு விதிக்கப்படும் எழுத்துத்தடையானது அவரது உடல் உள ரீதியான சஞ்சலங்களுக்கு வழிவகுக்கும் என்பதையும் சமூக ரீதியாக ஒரு படைப்பாளிக்கு விதிக்கப்படும் தடை கலைஞரின் வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்பையும் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.


அருந்ததி ராயின் புத்தகத் தடை
முற்போக்கு இந்தியப் பெண்முகங்களில் ஒருவராக அருந்ததிராய் காணப்படுகின்றார். எழுத்தாளர், சமூகசேவகர், அணு உலை எதிர்ப்பாளர், அரசியல் ஆய்வுக்கட்டுரையாளர் எனப்பல முகங்கள் கொண்டவர். இந்திய எழுத்தாளர்களில் முதல் புக்கர் பரிசு வென்றவர் இவர். 2003ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்படவிருந்த சாகித்திய அக்கடமிப் பரிசை இவர் மறுத்து விட்டார்.
1961இல் ரயீத் ராய்-மேரி தம்பதிக்கு மகளாக சில்லாங்கில் பிறந்தார். பள்ளிப்படிப்பை கோட்டயத்திலும், நீலகிரியிலும் நிறைவு செய்தார். டெல்லியில் உயர் படிப்பை முடித்தார்.
1989இல் in which Annie gives it those once என்ற திரைப்படத்திற்கு தேசிய விருது பெற்றார்.


2015ஆம் ஆண்டு மாட்டிறைச்சி உண்பதை குற்றமாக சித்தரித்து மதவெறி அமைப்புக்கள் வன்முறையில் ஈடுபட்டதை கண்டித்து மாட்டைப்போல மனிதர்களை கொல்வதாக கூறி அவ்விருதைத் திருப்பி அளித்தார்.


புனைவு இலக்கியத்திற்கு கொடுக்கப்படும் உலகின் உயரிய விருதான புக்கர் பரிசினை the god of small things என்ற நாவலுக்காக 1977ம் ஆண்டு புக்கர் பரிசைப் பெற்றார். மக்கள் இயக்கங்கள் மக்கள் போராட்டங்கள் குறித்து எழுதினார். குஜராத்தின் நர்மதா அணையின் உயரத்தை அதகரிப்பதை எதிர்த்த பழங்குடி மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.


உச்ச நீதிமன்றம் அரசுக்கு ஆதரவாக அளித்த தீர்ப்பை ‘நாகரீக வன்முறை’ என விமர்சித்தார். அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வருத்தமோ மன்னிப்போ கேட்க மறுத்து தண்டனையை மகிழ்வோடு ஏற்றார். அடையாளமாக ஒருநாள் சிறைத்தண்டனையும் ருபா 2000 அபராதமும் விதிக்கப்பட்டது. இவ்வாறான முற்போக்குச் சிந்தனை படைப்பாளியான அருந்ததிராயினுடைய எழுத்துப்படைப்பு ஒன்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் பாடத்திட்டத்தில் இருந்தும் நீக்கியுள்ளது இந்திய அரசாங்கம்.


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்தின் ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் இருந்து றுழசமiபெ றiவா உழஅசயனநள் (தோழர்களுடன் நடந்து செல்லுதல்) என்ற புத்தகம் தடை செய்யப்பட்டு நீக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக நீக்கமானது ஒரு படைப்பாளியையும் அவரது படைப்புக்களையும் அவமதிப்புக்கு உள்ளாக்கியதாக காணப்படுகிறது.


திஜாகராஜ பாகவதர், N.S கிருணன் வழக்கு
1944முதல் 1947வரை மிகவும் பரபரப்பாக நடந்த குற்றவியல் வழக்காக லட்சுமிகாந்தன் கொலைவழக்கு காணப்படுகிறது. இவர் சென்னை வேப்பேரியில் நவம்பர் 8 1944இல் கத்தியால் குத்தப்பட்டு அடுத்த நாள் காலையில் சென்னை பொது மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் நடந்த புலன் விசாரணையை அடுத்து ஐயத்திற்கு உட்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர். இதில் தமிழ் திரையுலகில் மிகப் புகழ்பெற்றிருந்த நடிகர்களான திஜாகராஜ பாகவதர், N.S கிருணன் மற்றும் இயக்குனர் சிரீராமுலு நாயுடு போன்றோர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கில் இயக்குனர் நாயுடு விடுவிக்கப்பட்டு நடிகர்களான தியாகராய பாகவதரும், கிருஸ்ணனும் குற்றவாளிகளாக தீர்மானிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அங்கும் இவர்களது மேல் முறையீடு தோல்வி அடைந்தது. 1947வரை சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அப்போதைய நாட்டின் உயரிய முறையீடு அமைப்பாக இருந்த பிரைவி கௌன்சிலுக்கு விண்ணப்பித்தனர். பிரைவி கௌன்சில் வழக்கை மீண்டும் விசாரிக்க அமர்வு நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்தது. இச்சமயம் இருவரும் குற்றமற்றவர்களாக தீர்ப்பு வழங்கப்பட்டு விடுதலையானார்கள்.


1940களில் தமிழ் திரையுலகின் Super Star விளங்கியவர் பாகவதராவார். அவருடைய கணீரென்ற குரலிற்கு மட்டுமல்லாமல் மனதைக் கவரும் தோற்றத்திற்கும் மக்கள் அடிமைப்பட்டுக் கிடந்தனர். இவர் குரல் மட்டுமல்ல சிகையலங்காரமும் அந்தக்கால இளைஞர்களிடையே பிரபலம் அடைந்திருந்தன. அந்த அளவிற்கு தமிழ் திரையுலகை ஆட்டி வைத்தவர். இவர் அளவிற்கு வேறு யாருமில்லை. செல்வத்தில் மிதந்தார். தங்கத் தட்டில் உணவு உண்கிற அளவிற்கு வசதியாக இருந்தார். இத்தனை புகழும் செல்வமும் பெற்ற அவரது வாழ்க்கை ஒரே நாளில் ஒரு கொலைவழக்கினால் தலைகீழானது.


N.S கிருஸ்ணன் அதே சம காலத்தில் பிரபலமாக இருந்த இன்னொரு நடிகர். பிற்காலத்தில் கலைவாணர் என்று அழைக்கப்பட்டவர். மேடைநாடகம், வில்லுப்பாட்டு, திரையுலகம் என்று பல துறைகளிலும் பிரசித்தி பெற்றவர். திரைப்படத்தில் தான் பங்கு பெறும் நகைச்சுவைக் காட்சிகளுக்கு தானே வசனமும் எழுதி காட்சிகளும் அமைப்பார். பல படங்களில் இவருக்கு ஜோடியாக பெண் கதாபாத்திரத்தில் நடித்த மதுரம் இவரது நிஜ வாழ்க்கையிலும் துணைவியாக ஆனார். திரைவானில் வெற்றிக் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையையும் அதே கொலைவழக்கு தாக்கி சின்னாபின்னமாக்கியது.


இதைவிட 1987 இல் நீலபத்மநாதன் எழுதிய ‘தேரோடும் வீதி’ நாவலின் எதிரொலியாக அவர் வீதியில் வைத்து தாக்கப்பட்டார். ஒரு காலத்தில் குமுதம் காரியாலயம் தி.மு.க வினரால் தாக்கப்பட்டது. ஆனந்த விகடனில் கேலிச்சித்திரம் வெளியானதால் அதன் ஆசிரியர் பாலசுப்ரமணியம் ஆ.பு.சு அதிகாரத்தில் இருந்தபோது சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வாறாக எழுத்துச் சுதந்திரங்கள் மறுக்கப்பட்டு படைப்பாளிகள் அடக்கப்படும் நிலைகள் இன்று வரையில் தொடர்ந்தவண்ணமே உள்ளன.


கலை சார்ந்தும், படைப்புக்கள் சார்ந்தும் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு ஜனநாயக நாடொன்றில் வாழும் பிரஜை ஒருவருக்கு சுதந்திரம் இருக்கின்ற போதிலும் கலைஞர்கள் மீதான வழக்குத் தொடுப்புக்களும், அவர்களது படைப்புக்கள் மீதான தடைகளும், புத்தக நீக்கல்களும் அவர்களை உடல், உள, சமூக அந்தஸ்து ரீதியாக இன்னல்களை ஏற்படுத்துகின்ற ஒன்றாகவே காணப்படுகின்றது.

பௌர்ஜா அன்ராசா.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More