டுபாயில் நேற்று நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியின் சூப்பர்12 சுற்றில் குரூப்-1 பிரிவில் நடந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனையடுத்து. 126 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 11.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து அணி 6 புள்ளிகளுடன் 3.948 ரன் ரேட்டில் முதலிடத்தில் உள்ளதுடன் அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்யும் வகையில் பிரகாசப்படுத்தியுள்ளது
கடந்த 3 ஆண்டுகளுக்குள் 2019ம் ஆண்டு நடந்த 50 ஓவர்கள், இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் , இரு ஐசிசி தொடர்கள் ஆகியவற்றில் இங்கிலாந்து அணி. அவுஸ்திரேலியாவை வென்றுள்ள நிலையில் எதிா்வரும் நவம்பர் இறுதியில் நடைபெறவுள்ள இரு அணிகளும் பங்கேற்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு இந்த வெற்றிகள் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும் என தொிவிக்கப்படுகின்றது